1150 x 80 px
திடீர் வெள்ளத்தால் காலியில் 1960 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டின் சில பகுதிகளில் பெய்த அடை மழை காரணமாக மீண்டும் வெள்ளம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெய்த அடைமழை காரணமாக காலி, களுத்துறையிலுள்ள சில பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று முன்தினம் இரவு (12) பெய்த கன மழையினால் காலி பிரதேசத்தில் 1960 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

நேற்று காலை ஆறு மணியுடனான 24 மணித்தியால காலப்பகுதியில் காலி ஜின்தொட்ட பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி 175 மில்லிமீற்றராக பதிவாகி உள்ளது.

இதேவேளை பெய்த அடை மழைகாரமாக காலி நகரின் தங்கெதர டிடிஸ்வத்தை கிராமம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த வீடு முழுமையாக பாதிப்படைந்துள்ளது.

இக்காலப்பகுதியில் காலி நகரத்தில் 160 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது. கோனபீனுவல என்ற பகுதியில் 125 மில்லமீற்றர் மழை வீழ்ச்சியும் ஹக்மீமன பகுதியில் 98 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளது.

நேற்றிரவு பெய்த கடும் மழையின் காரணமாக பேருவளை, பாணத்துறை ஆகிய பிரதேச பகுதிகளில் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக களுத்துறை மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கால்வாய்கள் மற்றும் வடிகான் கட்டமைப்பில் நீர் வழிந்தோடுவது தடைப்பட்டமை இதற்கு காரணம் என்றும் மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் கேணல் பிரசாத் ஜயசிங்க தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top