1150 x 80 px
கோட்டாவின் ஜனாதிபதி கனவில் விழுந்தது மண்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி கனவை நனவாக்கி அதற்கு விளம்பரம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட வியத்மக அமைப்பில் பலத்த கருத்து வேறுபாடுகளுடன் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அமைப்பில் உள்ள ஒரு பிரிவு தனித்து செயற்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்ற வியத்மக அமைப்பின் மாநாட்டில் மிதவாதக் கொள்கையுடையவரும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வலியுறுத்தி வருபவருமான பேராசிரியர் ரொஹான் குணரத்தின பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

அதிகாரப் பரவலாக்கலை கடுமையாக எதிர்க்கும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, பேராசிரியர் நளின் சில்வா போன்ற முன்னாள் இராணுவ முக்கியஸ்தர்கள் இதன் காரணமாக கடுமையான அதிருப்திக்கு உள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

ரொஹான் குணரத்தின வியத்மக அமைப்புடன் தொடர்ந்தும் இணைந்து செயலாற்றத் தொடங்கினால் அதன் கடும் போக்கு உறுப்பினர்கள் பலரும் அமைப்பில் இருந்தும் விலகும் தீர்மானத்தை மேற்கொள்ளக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ரொஹான் குணரத்தினவை கோட்டாபய ராஜபக்ஷவே தனது தனித் தீர்மானத்தில் அழைத்துள்ளார். ரொஹான் குணரத்தின அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் முகவர் என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால் கோட்டா உள்ளிட்ட குழுவின் தேசப்பிரேமி முகத்திரை கிழிந்துள்ளது.

மஹிந்த மற்றும் கோத்தா ஆதரவு தொழில்சார் நிபுணர்களின் அமைப்பான வியத்மக அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் கடுமையான இனவாதப்போக்குகளின் அடிப்படையிலேயே தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top