1150 x 80 px
ரூபவாஹினி தலைவர் விடைபெற்றார் விரைவில் ITN தலைவர்..

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தன தனது இராஜினாமா கடிதத்தை ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது.

சுய விருப்பின் பேரில் இராஜினாமா செய்வதாகவும் மூன்று வருடகால சேவையின் பின் ஓய்வுபெறும் நேரம் வந்துள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

நட்டத்தில் இயங்கிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளதாகவும் தொலைகாட்சியை விட்டு விலகி இருந்த இரசிகர்களை மீள அழைத்துள்ளதாகவும் அதனால் மிக விருப்பத்துடன் இராஜினாமா செய்வதாகவும் ரவி ஜயவர்த்தன கூறியுள்ளார்.

மேலும் சுயாதீன தொலைக்காட்சியின் தலைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தனது பதவியி்ல் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக தெரியவருகிறது. அவரும் சுய விருப்பின் பேரில் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகவுள்ளார்.

ஊடக அமைச்சின் கீழ் இருக்கும் நிறுவனங்களுக்கு தலைவர்கள் மாற்றப்படவுள்ளதாக நாம் இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம். ஊடக அமைச்சின் கீழ் இருக்கும் செலசினே நிறுவனத்தில் தலைவர் சாந்த பண்டாரவும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top