1150 x 80 px
கோதாபயவிற்கு ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை என்கிறார் டிலான்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஜோன் செனவிரத்னவின் இந்த நிலைப்பாட்டிற்கு அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற 16 பேர் அடங்கிய குழுவில் அநேகமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த நிலைநாட்டிற்கு அணியில் உள்ள எவரும் உடன்படுவதில்லை என தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹாலி - எல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, டிலான் பெரேரா இதனைத் தெரிவித்தார். ஜோன் செனவிரத்னவின் இந்தக் கருத்தை நிராகரிப்பதாகவும் டிலான் பெரேரா இதன்போது தெரிவித்தார்.

அவரது வயதைக் கருத்திற்கொண்டு, அவர் கூறும் சில கருத்துக்களைப்; பொருட்படுத்தக்கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், 16 பேர் அடங்கிய குழுவினர் கோதாபய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க எந்தச் சந்தர்ப்பத்திலும் தீர்மானிக்கவில்லை எனவும், ஒரு சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் குழுவின் ஒட்டுமொத்தக் கருத்தாக எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top