1150 x 80 px
லசந்த கொலை சாட்சி அழித்தவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சாட்சிகளை அழித்ததாக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவிற்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிக்கப்படும் என அரச சட்டத்தரணி கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் அறிவித்துள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரசன்ன நாணயக்காரவிற்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டால் அவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றுக்கு இல்லை.

பிரசன்ன மற்றும் திஸ்ஸசிறி சுகதபால சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தால் வழக்கு எதிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவியல் சட்டத்தின் 127வது சரத்தின்கீழ் பிரசன்ன நாணயக்கார விசேட உரைஒன்றை ஆற்றவுள்ளதாக தெரியவருகிறது. அதன்பின் அவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறுவதுடன் அவருக்கு சட்டத்தரணி அவசியமில்லை.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top