1150 x 80 px
க்லைபோசைட் தடை நீக்கத்திற்கு எதிர்ப்பு

க்லைபோசைட் தடை நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தரமுல்லையில் உள்ள பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு முன்பாக சிறுநீரக நோய் எதிர்ப்பு அமைப்பு ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியது.

சிறுநீரக நோய், புற்று நோய் போன்றவைகள் ஏற்பட காரணம் என உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட க்லைபோசைட் மருந்தின் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியதன் உண்மை பின்னணி என்ன என்று குறித்து அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

மொன்சென்டோ நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் தரகு பணத்தி்ற்காகவே அரசாங்கம் குறித்த தடை நீக்கத்தை செய்துள்ளதாக சிறுநீரக நோய் எதிர்ப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்மூலம் இந்த அரசாங்கம் மக்களுக்காக அன்றி சர்வதேச நிறுவனங்களின் தேவைகளுக்காக செயற்படுகின்றமை புலப்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top