1150 x 80 px
எரிபொருள் விலை ஏற்றத்திற்கான காரணத்தை கண்டுபிடித்தது ஜேவிபி

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம் டொலரின் பெறுமதி அதிகரிப்போ அல்லது உலக சந்தையில் விலை அதிகரிப்போ கிடையாது எனவும் வரி அதிகரிப்பே காரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

டீசல் ஒரு லீட்டர் 83.40 ரூபாவிற்கு இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அதற்கான வரி 31.60 ரூபா எனவும் பெற்றோல் ஒரு லீட்டர் 78.40 ரூபாவிற்கு கொண்டுவரப்படுவதாகவும் அதற்கான வரி 60.19 ரூபா எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் வரி அதிகரிப்பின் காரணமாகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு முன்னர் விலை குறைப்பதாகக் கூறிய அரசாங்கம் தற்போது விலை அதிகரிப்பு செய்து வருவதாகவும் அதனால் மக்கள் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top