1150 x 80 px
மஹிந்த முன்னிலையில் கோட்டா ஆற்றிய உரையினால் நாடே சிரிக்கிறது..!

அண்மையில் கொழும்பு செங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வியத்மக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ, தற்போததைய அரசாங்கத்தின் நிதி பிரச்சினைக்கு காரணம் ஊழல் என குறிப்பிட்டுள்ளார். நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைய வேண்டுமாயின் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபடக் கூடாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவரும் நாட்டின் யாப்பு மற்றும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழ் வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார். யாப்பு மற்றும் சட்டத்தை மீறி யாருக்கும் செல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னால் அமரவைத்தே கோட்டாபாய இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார். இவ்வாறு கருத்து வௌியிடுவதாயின் ஒன்று கோட்டாபயவிற்கு கடந்த 10-15 வருடங்களில் நடந்தவை மறக்கும் அளவிற்கு மறதி நோய் உள்ளது அப்படி இல்லையாயின் நாட்டில் உள்ள மக்கள் பழைய விடயங்களை மறந்து விட்டனர் என்று கோட்டாபய கனவு கண்டிருக்க வேண்டும்.

கடந்த 10 வருடங்களாக நாட்டின் சொத்துக்களை தங்களது சொத்து என நினைத்து வௌிநாடுகளுக்கு விற்று பணமாக்கி திண்ற கோட்டாபய ராஜபக்ஷவே இன்று இவ்வாறு பேசியிருக்கிறார்.

அவரது ஆட்சி காலத்தில் அவர் செய்த தில்லுமுல்லு வேலைகளில் ஒருசிலவற்றை நாம் கீழே தருகிறோம்.

டி.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் அமைக்க தாழ்நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் மில்லியன் கணக்கான பணத்தை பயன்படுத்தியமை

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளம்பரம் ஔிபரப்பக் கோரி லட்சக்கணக்கான பணம் செலுத்தாமை

மோசடியான மிக் விமான கொள்வனவில் உலகில் எங்கும் பதிவு செய்யப்படாத நிறுவனத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கிமை

திவிநெகும பணத்தை பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிற்கு விளம்பரம் அச்சிட்டமை

2015 ஜனாதிபதி தேர்தலில் சில் உடை கொள்வனவு செய்ய தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவில் இருந்து 600 மில்லியன் செலவிட்டமை

கிரேக்க நாட்டு பிணைமுறையில் முதலீடு செய்ததால் ஏற்பட்ட மில்லியன் கணக்கான நட்டம்

மேல்கண்டவை கடந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளில் ஒருசில சம்பவங்களாகும். மேலும் பொலிஸ் மற்றும் முப்படைகளை பயன்படுத்தி வடக்கில் ஆட்கடத்தலில் ஈடுபட்டமை வௌ்ளைவேன் கலாசாரத்தை உருவாக்கியமை ஊடகவியலாளர்களை விரட்டி விரட்டி அடித்தமை போன்றவற்றை முன்னின்று செய்வித்த கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்கள் மத்தியில் வந்து அனைவரும் சட்டம் ஒழுங்கிற்கு கட்டுப்பட வேண்டும் என கதை வசனம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

தன்னை முன்னால் வைத்துக் கொண்டு தனது ஆட்சியில் இடம்பெற்றவற்றை கட்டுக் கட்டாக அவிழ்த்துவிடும் கோட்டாவின் உரையை கேட்டு 'இவன் என்ன பேசுகிறான்' என்று மஹிந்த நினைக்காமல் இருந்திருந்தால் அது புதுமைதான்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top