1150 x 80 px
பிரித்தானிய பிரஜைகளின் அடுத்தடுத்த மரணத்தால் பெரும் சர்ச்சை!

இலங்கை வந்திருந்த மற்றுமொரு பிரித்தானிய பிரஜை மரணமடைந்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய ரக்பி விளையாட்டு கழக வீரர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். 27 வயதான தோமஸ் ரீட் என்ற வீரரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

குறித்த இளைஞன் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மாலை உயிரிழந்துள்ளார். அதே அணியை சேர்ந்த மற்றுமொரு வீரர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரின் பரிசோதனைகள் இன்று இடம்பெற்றுள்ளன. மூச்சுத்தினறல் காரணமாகவா அல்லது அதிக மது அருந்தியமையினாலா மரணம் ஏற்பட்டது என சந்தேகம் நிலவுகிறது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக உயிரிழந்த வீரரின் சடலம் அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இதுவரை காரணங்கள் கண்டுபிடிக்கப்படமையினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top