1150 x 80 px
அநுருந்த பொல்கம்பல திடீர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுருந்த பொல்கம்பல குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக நீதிமன்றத்தை புறக்கணித்துச் சென்றுள்ளதால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

2004ம் ஆண்டு ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் பின்னர் விலக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்து சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாடிற்கு அனுப்பிய குற்றச்சாட்டில் அவர் பதவி விலக்கப்பட்டார். பின்னர் பசிலுடன் இணைந்திருந்த அவர் கடந்த முறை தேர்தலில் மஹிந்த அணிக்கு பிரச்சாரம் செய்தார்.

அதன்பின் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்த அவருக்கு அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் ஜேவிபி உள்ளிட்ட பல தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பினால் ஜனாதிபதி அவரை தலைவர் பதவியில் இருந்து விலக்கினார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்கு மண் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தை அவர் பொறுப்பெடுத்த நிலையில் அந்த திட்டத்தை செயற்படுத்தியவர்களுக்கு 80 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளதுடன் போலி காசோலை ஒன்றையும் வழங்கி ஏமாற்றியுள்ளார். இது தொடர்பில் அநுருந்த பொல்கம்பல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்ததுடன் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த அவர் நீதிமன்ற அழைப்பை தொடர்ச்சியாக புறக்கணித்து வந்துள்ளார். அதன் விளைவாக அவர் குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பில் 2017ம் ஆண்டு அவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு குற்றச் செயல் புரிந்த பின்னணி கொண்டுள்ள அநுருந்த பொல்கம்பல, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோ மூலமாக ஜனாதிபதியுடன் நெருங்கி பின் மரக் கூட்டுத்தாபன தலைவர் பதவி பெற்றுள்ளதாக தெரியவருகிறது. அநுருந்த தொடர்பில் ஜனாதிபதியுன் பிற்காலத்திலேயே அறிந்து கொண்டுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top