1150 x 80 px
FCID பிரிவுக்கு புதிய பொறுப்பாளர்

பொலிஸ் நிதி மோசடி பிரிவின் (FCID) பதில் பொறுப்பாளராக குற்றத் தடுப்புப் பிரிவின் பிரதானி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி பிரிவின் (FCID) பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வித்யாலங்கார கடந்த 14ம் திகதியுடன் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவரது சேவை காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கவில்லை. எனினும் எதிர்வரும் காலத்தில் வேறு பதவி ஒன்று வழங்கப்பட்டு ரவி வித்யாலங்கார பொலிஸ் நிதி மோசடி பிரிவின் (FCID) முக்கியஸ்தராக செயற்படுவார் என தெரியவருகிறது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top