1150 x 80 px
புதிய தலைவர்கள் நியமனம் பெற்றனர்

அரச ஊடக நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்கள் இன்று (16) தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

அரச இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட புதிய தலைவர்கள் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக சித்தி முஹம்மத் பாரூக், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக சிரேஷ்ட திரைப்பட இயக்குனர் இனோக்கா சத்யாங்கனி, சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவன தலைவராக திலக ஜயசுந்தர, செலசினே தொலைக்காட்சி நிறுவன தலைவராக உமா ராஜமந்திரி ஆகியோரும் ஊடகத்துறை அமைச்சில் வைத்து தமது நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஊடக பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண , நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top