1150 x 80 px
ஹட்டனில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பொலிசார்

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு ஹட்டன் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை பொலிசார் அகற்றிவருகின்றனர்.

ஹட்டனில் நகரில் ஆங்காங்கே பல கட்சிகள் சுவரொட்டிகள் இவ்வாறு தேர்தல் சட்டத்திற்கு முரணாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் இவற்றைப் பொலிசார் அகற்றுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், ஹட்டன் பிரதேசத்தில் அமைதியான ஒரு தேர்தலை நடத்துவதற்காக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஹட்டன் பொலிஸ் தலைமையகம் செய்து வருவதாக ஹட்டன் பொலிசார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசேட நடமாடும் சேவைகளையும் நடத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மொஹொமட் ஜெமில் தெரிவித்தார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top