1150 x 80 px
வட மாகாண வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

வட மாகாண சபையின் கீழ் இயங்கும் அனைத்து வைத்தியசாலைகளின் வைத்தியரகைளும் இன்று (14) அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா கிளை செயலாளர் எஸ்.திருவேரகன் தெரிவித்துள்ளார்.

யாழ். பொதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வட மாகாண வைத்தியசாலை வைத்தியர்களுக்கு கடந்த 5 மாதகாலம் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய அடையாள பணிப்பகிஸ்கரிப்பு நடத்தப்படுவதாகவும் இந்நிலை தொடர்ந்தால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வட மாகாண வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top