1150 x 80 px
உலகில் தரம் வாய்ந்த ராணுவத்தைக் வடகொரியா கொண்டுள்ளது

'உலகில் தரம் வாய்ந்த ராணுவத்தைக் வடகொரியா கொண்டுள்ளது'' என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்னதாக வடகொரியாவில் நேற்று ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

வடகொரியா ராணுவத்தின் 70வது ஆண்டை கொண்டாடும் விதமாக ராணுவ அணிவகுப்பு நடந்தது. ராணுவ அணிவகுப்பில் பல்வேறு ஏவுகணைகள் அணிவகுக்கப்பட்டிருந்தன.

ராணுவ அணி வகுப்பை பார்வையிட்ட வடகொரிய அதிபர் கிம் ஜோங் கூறியதாவது..... உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடாக வடகொரியா மாறியுள்ளது. உலகம் தரம் வாய்ந்த ராணுவத்தை நாம் கொண்டுள்ளோம்'' என தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top