1150 x 80 px
பேரூந்து விபத்துக்குள்ளானதில் 26 மாணவர் பலி

இமாச்சலப் பிரதேசம் கங்க்ராவில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நுர்புர் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையொன்றிலிருந்து 60 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தே நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த 26 மாணவர்கள் மற்றும் நான்கு பேர் உட்பட மொத்தம் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்து மலைப் பகுதி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது 100 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாகவும், சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே மேற்படி விபத்து சம்பவித்துள்ளதாகவும் இமாச்சல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. அத்தோடு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு, அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top