1150 x 80 px
மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்கிறது அமெரிக்கா

சிரியாவில் இனிமேலும் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்குப் பதிலடியாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இணைந்து சிரியா மீது நேற்றுமுன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தின.

இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையிலேயே சிரியாவில் இனிமேலும் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் ஏவுகணைத்தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top