1150 x 80 px
தேவாலயங்களை குண்டு வைத்து தகர்த்திய குடும்பம்

இந்தோனேசியாவின் சுரபாயா நகரில் 3 தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே மேற்கொண்டுள்ளதாக சுரபாயா காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் 13 பேர் உயிரிழந்ததோடு, 40 பேர் வரை காயமடைந்தனர்.

12, 9 வயதான இரு மகள்களுடன் தாய் ஒருவர் ஒரு தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டுள்ள அதேவேளை, அந்த பெண்ணின் கணவர் மற்றுமொரு தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இவர்களின் 18, 16 வயதான மேலும் இரு மகன்கள் மூன்றாவது தேவாலயத்தை தாக்கியுள்ளனர்.

இவர்கள், ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்ட Jemaah Ansharut Daulah (JAD) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல்களை நேரில் சென்று பார்வையிட்ட இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, மனிதகுல வரம்புக்கு அப்பாற்பட்ட மிலேச்சத்தனமான நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top