சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் பாலித மஹிபால நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தாவினால் இன்று (18) ஓய்வுபெறும் வயதை நிறைவு செய்தமையே இதற்குக் காரணம்.
விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியையும் சர்வதேச சுகாதார நிறுவனங்களில் பல பதவிகளையும் வகித்துள்ளார்.