Wednesday, May 8, 2024

Latest Posts

கலாச்சார மண்டபத்தில் மத்திய அரசிற்கு இடமளிக்க மணிவண்ணன் முற்படுவது ஒட்டகத்திற்கு இடமளிப்பதற்கு ஒப்பானது.

இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தில் மத்திய அரசிற்கு இடமளிக்க இணக்கம் தெரிவிப்பதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவிப்பது அப்பட்டமான துரோகம் என மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார்

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் புதுவருட தினத்தன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது கலாச்சார மண்டபத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்காவிற்கு இடமளிக்க இணக்கம் தெரிவித்ததாக முதல்வர் பதிலளித்தார்.

இந்த இணக்கத்திற்கு  எங்கு, யாரால், எப்போது தீர்மானிக்கப்பட்டது.  அந்த இணக்கம் தெரிவிப்பது தொடர்பில் சபையில் இதுவரை ஏதும் பிரஸ்தாபிக்காமல் இணக்கத்தை தெரிவிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு யார் வழங்கியது. இந்த செயல்பாடானது ஒட்டகத்திற்கு இடம் கொடுப்பதற்கு ஒப்பானது.

மாநகர முதல்வர் தன்னை கைது செய்த நேரம் பிரதி முதல்வர் தானே முதல்வராக உங்களிடம்( ஊடகங்களிடம்  கூறியதாக தெரிவிப்பதோடு  காசோலையில் ஒப்பமிட முயன்றார் என நிதிப் பொறுப்பை பறிக்க முயன்ற மதிரியான தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்.

உண்மையில்  2 வருடத்திற்கு மேல் முதல்வராக  இருந்த நானோ  அல்லது தற்போதைய முதல்வர்  வி.மணிவண்ணனோ எந்த காசோலையிலும் எப்பவுமே ஒப்பமிட முடியாது. அப்ப எவ்வாறு பதில் முதல்வர் ஒப்பமிட முனைந்தார் எனக் கூறப்படுகின்றது என்பது தொடர்பில் எனக்குப் புரியவில்லை.

இதறகும் அப்பால் முக்கிய  விடயம் நவம்பர 30ஆம் திகதிய மாதாந்த கூட்டத்தில் தனக்கு தெரியாமல் இரகசியமாக ஓர் தீர்மானத்தை போட்டு தனது அதிகாரத்தில் தலையிட முயன்றதாக முதல்வர் கூறியுள்ளார்.

அதுவும. சுத்தப்பொய் ஏனெனில் முதல்வர் சபையை ஒத்தி வைக்க முற்பட்ட சமயம் எமது உறுப்பினர் ஒருவர் பிரதி முதல்வரையும் அழைத்துச் சென்று ஆணையாளர் முன்னிலையில் இந்த விடயத்தையேனும் சபையில் எடுத்த பின்பு செல்லுங்கள் எனக் கேட்டபோது  இல்லை எனக்கு நேரம் காணாது நீங்கள் விவாதித்து ஒரு முடிவை எடுங்கோ என இதே முதல்வர் பதிலளித்தார். இதனை டிசம்பர் மாதம் 28ஆம் திகதிய கூட்டத்தில் முதல்வரிடம் சென்று கதைத்த உறுப்பினர்  மூன்று தடவை பகிரங்கமாக கூறுவது ஒலி நாடாவில் உண்டு.

இதற்கும் மேலதிகமாக மாநகர சபையின்  45 உறுப்பினர்களிற்கும் டிசம்பர் 16 ஆம் திகதி தமது கோரிக்கையினை வர்த்தகர்கள்  எழுத்தில் அனுப்பியிருந்தனர் அதன் பின்பும் எனக்கு தெரியாது எனக் கூறுவது வர்த்தகர்களை ஏமாற்றும் செயலாகவே இருக்கும்.

இவை அனைத்தையும் தாண்டி  த.தே.கூட்டமைப்பின் ஆட்சியில் 2020ஆண்டு டிசம்பர் மாதம் முன் வைத்த 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை  தோற்கடித்தமை  ஆரசியல் காரணங்களிற்காகவும்தான் தோற்கடித்தோம் என முதல்தடவையாக ஒப்புக்கொண்டமைக்கும்  நன்றிகள்.

இதேநேரம் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் கலாச்சார மண்டபம் மத்திய அரசிடம் சென்றுவிடும் எனக் கதை விட்டவர்கள் தற்போது வாய் மூடி மௌனிகளாக உள்ளனர்  என்றார்.
Attachments area

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.