இந்த நாட்டில் இருந்து சீனாவிற்கு 33 உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு சீனக் குடியரசின் பொது சுங்க நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இவற்றில் 29 தயாரிப்புகள் கடல் மீன்பிடி நீர்வாழ் பொருட்கள் என்றும், சீனக் குடியரசில் பதிவுசெய்யப்பட்ட 38 இலங்கை நிறுவனங்கள் அந்தப் பொருட்களை ஏற்றுமதியாளர்களாகச் செயல்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த தயாரிப்புகளின் ஆய்வு, தனிமைப்படுத்தல் மற்றும் கால்நடை சுகாதாரத் தேவைகள் குறித்து சீன மக்கள் குடியரசின் சுங்க பொது நிர்வாகம் மற்றும் மீன்பிடி அமைச்சு ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தத்தில் கையெழுத்திட மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (3) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
N.S
