ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
‘மொட்டு’க் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ‘மொட்டு’ச் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் அவர் அறிவித்தார்.
N.S