நாமல், ஜோன்ஸ்டன், பிரசன்ன அமைச்சுப் பதவிகளில் மாற்றம், லன்சா குறித்தும் தீர்மானம்!

Date:

அமைச்சரவை மறுசீரமைப்பு ஜனவரி 12ஆம் திகதி இடம்பெறும் என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கீழ் மேலும் பல அமைச்சுக்கள் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நிமல் லான்சாவை அமைச்சரவை அமைச்சராக நியமிக்க முன்மொழியப்பட்ட போதிலும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இவை அனைத்தும் அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான தற்போதைய நிலைமைகள் எனவும், கடைசி நேரத்தில் இவை மாறலாம் எனவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை நிலவரம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அமைதியான போராட்டம்

கொழும்பு LNW: ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரும் சர்வதேச காணாமல்...

சிகிச்சை முடிந்து வெளியேறிய ரணில்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்...

சஷீந்திரவுக்கு பிணை மறுப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக...