அமைச்சரவை மாற்றம், பீரிஸ், தினேஸ், சரத் அகற்றம், திலும், சானக்கவிற்கு அதிஸ்டம்!!

Date:

விரைவில் நடைபெறவுள்ளதாக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தில் ஜி. எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகிய அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி. எல். அமைச்சுப் பதவியை வகிக்க முடியாது எனவும், அநேகமாக அவர் எதிர்காலத்தில் சபாநாயகராக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ள சரத் வீரசேகரவிற்கு பதிலாக தற்போது பொலிஸ் இராஜாங்க அமைச்சராக இருக்கும் திலும் அமுனுகம ​பொலிஸ் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் டி. வி.சானக்கவும் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

மஹிந்தானந்த அளுத்கமகே தனது அமைச்சுப் பதவியை இழப்பதுடன், அந்த அமைச்சும் பிரசன்ன ரணதுங்கவின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாம் முன்னர் தெரிவித்தது போன்று ஜனவரி 12ஆம் திகதிக்கு பதிலாக ஜனவரி 10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் எனினும் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் சுபமுகூர்த்தம் இல்லாத காரணத்தினால் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய நிலைமை கடைசி நேரத்தில் மாறலாம் என அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...