கல்கிஸ்ஸ மவுண்ட்லெவன்யா வீதியில் இன்று (ஜனவரி 07) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதான சுதத் கோம்ஸ் மற்றும் 20 வயதான சானுக விமுக்தி பீரிஸ் என்ற நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 04.45 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
36 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை மவுண்ட்லெவன்யா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.