இஸ்லாத்தை அவமதித்ததற்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நிராகரித்தார்.
இந்த தண்டனைக்கு எதிராக தேரர் மேல்முறையீடு செய்துள்ளதால், மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு தேரரின் வழக்கறிஞர்கள் இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்தனர்.