வவுணதீவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

0
171

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாந்தீவு வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

படகில் மீன்பிடிக்கச் சென்ற நபர் இரண்டு தினங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுணதீவு மாந்தீவு வாவிக்கு மீன்பிடி தொழிலிற்காக சென்றவரே இரண்டு தினங்களின் பின்னர் நேற்று புதன்கிழமை (10) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஈச்சந்தீவு, நாவற்காடு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாந்தீவை அண்டிய வாவியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here