சுதந்திர கட்சிக்கு நேரடியாகவே Get out சொல்லும் அமைச்சர் நாமல்

0
152

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடகங்களில் பார்த்தேன். ஆங்காங்கே சொல்லித் திரிவதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில், மக்கள் எந்த இடத்திலும் சிரமப்பட வேண்டியதில்லை. இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சரவையில் இருப்பதால் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். தனியே மொட்டுக் கட்சி மீது குற்றம் சுமத்த முடியாது.

இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மொட்டுக் கட்சியும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது. அமைச்சரவை என்ற வகையில் எமக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது.

அந்தக் கொள்கைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வகையிலும் பொருந்தவில்லையென்றால், வேறு கொள்கைகளைக் கேட்பார்களானால் கட்சித் தலைமைகள் வெவ்வேறு கூட்டங்களில் விமர்சித்துக் கொண்டிருக்காமல் கண்ணியமாகப் பேசுவது நல்லது என்று நாமல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here