உலகமெங்கும் தமிழர்கள் இன்று தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை மாதம் தொடங்கினாலே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாதத்தின் தொடக்கமே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் தமிழர் மரபில் உண்டு.
குறிப்பாக சூரிய நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு மாதங்களைக் கணக்கிடும் இந்த நாள் முதன்மையான பண்டிகையாகத் திகழ்கிறது.
அந்த வகையில் சூரியபகவான் மகர ராசிக்குள் பெயர்ச்சியாகும் தை முதல் நாளை சூரியனை வழிபட உகந்த நாளாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்பவர் சூரிய பகவானே. கண்கண்ட கடவுளான சூரியனின் ஆற்றலே மழை பொழியவும் நிலம் செழிக்கவும் பயிர் விளையவும் உயிர்கள் வாழவும் காரணமாகிறது.
அப்படிப்பட்ட சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் பண்டிகையாகும்.