இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மரக்கறி விலைகள் அதிகரிப்பு

Date:

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம் பொதுச் சந்தைக்கு வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளனர்.

ஏனைய நாட்களில் அநுராதபுரம் பொதுச் சந்தைக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகை தந்திருந்த நிலையில் இன்றைய தினங்களில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தைக்கு வருவதில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் மொத்த விலை 1500.00 ரூபாவாகவும் சில்லறை விலை 1700.00 ரூபாவாகவும் இன்று மேற்கொள்ளப்பட்ட வினவுதலில் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்தார்.

ஒரு கிலோ போஞ்சி மொத்த விலை 1,000.00 ரூபாவாகவும் சில்லறை விலை 1,400.00 ரூபாவாகவும் உள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 1,000.00 ரூபாவாகவும், சில்லறை விலை கிலோ ஒன்றின் மொத்த விலை 1,300.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

5,000 வீடுகள் கையளிப்பு

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே...

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை...

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...