ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு எதிர்வரும் 18ம் திகதிக்குப் பின்னர் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் இருந்து விலக உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்திற்கான பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகி ஜனாதிபதி தனது கொள்கை உரை நிகழ்த்திய பின்னர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் அரசாங்கத்தில் இருந்து வௌியேற உள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் மேலும் சில ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து வௌியேற உள்ளதாக கூறப்படுகிறது.