யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!

0
265

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

பதில் பொலிஸ்மா  அதிபரின் பணிப்புரைக்கிணங்க போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமாகிய யுக்திய நடவடிக்கை பொலிஸாரால் நாடு பூராகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் எனப் பலரும் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த விசேட பூஜை வழிபாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்ப்பாணம்  பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here