அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும், இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் டொலர் பற்றாக்குறையே பல நெருக்கடிகளுக்கு காரணம் என சுட்டிக்காட்டிய அமைச்சர், என்ன சொன்னாலும் இந்த நெருக்கடியை போக்க அரசாங்கம் தவறியுள்ளதாக தெரிவித்தார்.
இந்தத் தோல்வியை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அமரவீர குறிப்பிடுகிறார்.
அண்ணளவாக 17,200 பில்லியன் வெளிநாட்டுக் கடன்கள் இருப்பதாகவும், கடந்த காலங்களில் பெற்ற கடன் தொகையும், எதிர்காலத்தில் எடுக்கப்படும் கடன் தொகையும் கணிசமாக அதிகரிக்கும் எனவும் சுற்றாடல் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
அது
1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்துத் தலைவர்களும் இந்நிலைக்குக் காரணமானவர்கள் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக மக்களை அடகு வைத்து கடன் பெறுவதைத் தொடர்ந்தனர் என்றும் அமரவீர கூறுகிறார்.