ஜனாதிபதி நியமித்த குழுவால்புதிய சட்ட வரைவு கையளிப்பு!

Date:

பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஆக்கபூர்வ உரிமைகளைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு பொது அரங்கக்கலை வகைப்படுத்தல் சட்ட வரைவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட உறுப்பினர் குழுவால் அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

இந்த புதிய வரைவைத் தயாரிப்பதற்காக தணிக்கை சபையின் முன்னாள் தலைவர் சமன் அதாவுதஹெட்டி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் திரைப்படவியலாளர் அசோக ஹாதகம, நாடகக் கலைஞர் ராஜித திஸாநாயக்க, படைப்பாளர் அனோமா ராஜகருணா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜகத் விக்கிரமநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

திரைப்படம், நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து புதிய சர்வதேச போக்குகள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப இந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 1912 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொது அரங்கேற்றக்கலை கட்டளைச் சட்டத்தினை ஆராய்ந்து இந்தப் புதிய சட்டத்தைச் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தச் சட்டத்தின் ஊடாக கலைப் படைப்புகள் தொடர்பில் எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன எனவும், இந்தச் சட்டத்தின் மூலம் படைப்பு சுதந்திரம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனவும் குழுவின் தலைவர் சமன் அதாவுதஹெட்டி தெரிவித்தார். – என்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உயிர் அச்சுறுதல்! துப்பாக்கி கேட்கும் அர்ச்சுனா எம்பி

வெளிநாட்டுத் தயாரிப்பான “ஸ்பிரே கண்’ (pepper spray) துப்பாக்கியை தமது தற்பாதுகாப்புக்காக...

பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...

லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...