மொட்டு கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கணவர் மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்களின் நிலைமை மோசமாக இல்லை மற்றும் எம்.பி உட்பட பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோகிலா ஹர்ஷனி கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை எனவே பாராளுமன்றத்தில் எவருக்கும் அவர் மூலம் வைரஸ் பரவும் அபாயம் இல்லை.
நேற்றைய தினம் இரண்டு அரசாங்க எம்.பி.க்கள் தொற்றுக்குள்ளாகி இருப்பது அடையாளம் காணப்பட்டது. மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கமும் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.