இன்று (23) காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலவச அரச சுகாதார சேவையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர்களை தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக சுகாதார அமைச்சு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் காரணமாக இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், தாய்மை மற்றும் குழந்தைகள் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகளில் இந்த வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
