Sunday, December 22, 2024

Latest Posts

அனுமதியின்றி காட்டப்பட்ட மகளின் முகம் – கோலி மனைவி அனுஷ்கா முன் வைத்த வேண்டுகோள்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஜோடி நீண்ட நாட்கள் காதலித்து பின்னர் கடந்த 2017-ஆம் நாட்கள் தேதி இத்தாலியில் நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். தங்களது திருமணத்திற்கு பிறகும் செல்வாக்குமிக்க ஜோடியாக திகழ்ந்த வந்தவர்கள் இந்த ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்கள். தங்களது குழந்தைக்கு வாமிகா என்று பெயர் வைத்தனர். பொதுவாக பிரபலங்கள் தங்கள் குழந்தை பிறந்து முதல் நாள் முதலே புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்துவிடுவார்.

ஆனால், குழந்தை பிறந்து ஒரு வருடங்கள் ஆகப் போகும் நிலையிலும் தங்களது குழந்தையின் முகத்தை எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்திலோ அல்லது புகைப்படமாகவோ வெளியிடவில்லை. வலைதளப் தங்களது மகளின் முகத்தை இதுவரை வெளியுலகத்திற்கு காட்டாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றினை வெளியிட்டார்.

மகள் முகத்தை காட்டாத காரணம் : அதில் வாமிகாவின் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ இதுவரை வெளியிடாமல் இருக்கும் ஊடகங்களுக்கு நன்றி. ஒரு பெற்றோராக நாங்கள் எங்களது மகளின் ஒரு வீடியோவையும் வெளியிட வேண்டாம் என்று தொடர்ச்சியாக ஊடகத்துறையிடம் கேட்டுக் கொண்டிருந்தோம். அதன்படி இதுவரை எந்த ஒரு புகைப்படத்தையும் எடுக்காமல் இருப்பதற்கு நன்றி. எங்களது குழந்தை சமூக வளைதளம் மூலமாகவோ அல்லது மீடியா மூலமாகவோ அறியப்பட்டு வளரக் கூடாது என்பதற்காகவும், எங்களது குழந்தையின் வாழ்க்கை மிகவும் ஃப்ரீயாகவும், இலகுவாக அமைய வேண்டும் என்பதனாலேயே நாங்கள் இதனை தவிர்த்து வருகிறோம்.

ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னர் அவரை நாங்கள் தடுக்க முடியாது. அதுவரை எங்களது குழந்தை குழந்தையாக வளர வேண்டும். அவருடைய பிரைவசிக்காகவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் வேண்டும். அனுஷ்கா சர்மா பதிவிட்டு ஊடகத்துறைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையிலான போட்டியின் போது கோலி மகளின் முகம் மைதானத்தில் கேமராவில் காட்டப்பட்டது. -விளம்பரம்-

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘எங்கள் மகளின் புகைப்படங்கள் நேற்று ஸ்டேடியத்தில் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதை நாங்கள் அறிந்தோம். நாங்கள் இதற்கு தயாராகவில்லை என்பதையும், அறிந்தோம். கேமரா இருந்தது எங்களுக்கு தெரியாது என்பதையும் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறது. நாங்கள் முன்பே குறிப்பிட்டதைப் போல வாமிகாவின் புகைப்படங்கள் க்ளிக் செய்யப்படாமல், பகிரப்படாமல் இருந்தால் மகிழ்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.