தெற்கு கடற்பகுதியில் 450 கோடி பெறுமதி போதைப் பொருள் மீட்பு

0
22

தெற்கு கடற்பகுதியில் கடற்படையினால் பொறுப்பேற்கப்பட்ட 2 பல நாள் படகுகளில் இருந்தும் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 450 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளும், 11 சந்தேகநபர்களும் தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடற்படையினர் நீண்ட தூர பயணக் கப்பல்களைப் பயன்படுத்தி இந்த படகுகளைக் கண்டறிய சிறப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த ஒரு படகில் 5 பேரும், மற்றைய படகில் 6 பேரும் இருந்ததாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 

இந்த படகுகளில் சுமார் 270 கிலோகிராம் போதைப்பொருள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளும் 11 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here