“சௌமிய தான யாத்திரை” திட்டத்தின் கீழ், பெருந்தோட்ட பகுதிகளுக்கு தற்போது விநியோகம் செய்யப்படவுள்ள உலர் உணவு பொருட்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் சென்று ஆய்வு செய்தார்.
பெருந்தோட்ட பகுதிகளில் ‘டிக்வா’ புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு “சௌமிய தான யாத்திரை” திட்டத்தின் கீழ், இதுவரை 100 டன்-களுக்கும் அதிகமான உலர் உணவுப் பொருட்கள் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட டிக்வா புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையாக மீளாத, இயல்பு நிலைக்கு திரும்பாத மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதாபிமான முயற்சியில் தங்களுடன் இணைந்து நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது இதயப்பூர்வமான நன்றிகளை செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

