பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

0
145

பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்தமை மற்றும் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் ஜனவரி 20ஆம் திகதி இரவு அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்துள்ளதுடன் கடமைகளுக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இதனையடுத்து அனுராதபுரம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திலும் அறிக்கையிடப்பட்டது. 

இதற்கமைய சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விசேட பொலிஸ் குழுவினால் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here