பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு சொந்தமான கணக்கிலிருந்து பாராளுமன்ற அலுவல்கள் செயலாளர் உதித் லொக்குபண்டார பணத்தை எடுத்த கதை இன்றும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது கணக்கில் இருந்து பணம் திருடப்படுவது இது முதல் முறையல்ல என்று தனது நண்பர்களிடம் பிரதமர் கூறியுள்ளார்.
இரண்டரை மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் கடமையாற்றிய சட்டத்தரணி ஒருவரின் நெருங்கிய சகா ஒருவரும் இதே முறையில் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளார்.
அதாவது, காசோலை மூலம். மகிந்த ராஜபக்ச நல்லெண்ண அடிப்படையில் தனது காசோலைப் புத்தகத்தில் கையொப்பமிட்டு அதே சட்டத்தரணியின் வசம் வைத்திருந்தார்.
சட்டத்தரணி உயிரிழந்துள்ளதாகவும், அவரது மகன் தற்போது நாமல் ராஜபக்சவின் பணியகத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.