இலங்கைத் தூதரகத்தின் ஜப்பானிய மக்களுக்கான நேரடி உணவுப் போட்டி

Date:

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் இரண்டு விருது பெற்ற இலங்கை சமையல் கலைஞர்களின் உதவியுடன் ஜப்பானில் உள்ள மக்களுக்காக இலங்கை உணவு வகைப் போட்டியை ஏற்பாடு செய்தது. போட்டிக்கு 140க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்ததுடன், அதில் தமக்கு விருப்பமான இலங்கை உணவைத் தயாரிப்பதைக் காட்டும் நேரடி வீடியோவில் 45 போட்டியாளர்கள் அரையிறுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒவ்வொரு சுற்றிலும் 9 போட்டியாளர்களையுடைய 5 சுற்றுக்கள் கொண்ட அரையிறுதிப்போட்டி தொழில்முறை சார்ந்த சமையல் ஸ்டுடியோவொன்றில் நடாத்தப்பட்டது. இறுதிப் போட்டிக்கு ஒவ்வொரு சுற்றிலிருந்தும் இரண்டு போட்டியாளர்களை நடுவர்கள் தேர்ந்தெடுத்ததுடன், எதிர்காலத்தில் நேரடியாக இதனை ஒளிபரப்பப்புவதற்கு தூதரகம் எதிர்பார்க்கின்றது.

ஐந்து அரையிறுதிச் சுற்றுக்கள் தூதரகத்தின் பேஸ்புக் கணக்கு மற்றும் ஏனைய ஜப்பானிய யூடியூப் உணவுச் சேனல்கள் மூலம் மூன்று முதல் நான்கு வார இடைவெளியில் ஒளிபரப்பப்படும். போட்டியாளர்கள் தமக்கு விருப்பமான இலங்கை உணவுகளை தயார் செய்வதற்கு ஒரு மணிநேரம் வழங்கப்பட்டதுடன், அதில் கறிகள், குறுகிய உணவுகள் மற்றும் இனிப்பு வகைகள் சமைத்து படைப்பாற்றல் மற்றும் விதிவிலக்கான தரத்துடன் வழங்கப்பட்டன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அனுசரணையுடன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல்கார்களை இறுதிப் போட்டிக்கு அழைத்து, பிரபல உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தினூடாக ஒளிபரப்புவதற்கு தூதரகம் எதிர்பார்க்கின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...