2021ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.
பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற அதிகாரபூர்வ இணைய தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சைக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இந்த பரீட்சை நடாத்தப்படவிருந்த போதிலும் கொரோனா பெருந்தொற்று நிலைமைகளினால் பரீட்சை நடாத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் சாதாரண தரப் பரீட்சை நடாத்தப்பட உள்ளது.
அதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், இம்முறை நாடளாவிய ரீதியில் 345,242 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளனர். 2,438 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.