Thursday, April 25, 2024

Latest Posts

“நீதியை நோக்கி யதார்தங்களும் வெளிப்பாடும்”

மனித உரிமை ஆர்வலரும், சுதந்திரமான  பகுப்பாய்வு ஆய்வாழருமான திரு ச. வி. கிருபாகரன் – (கிருபா) “நீதியை நோக்கி யதார்தங்களும் வெளிப்பாடும்” (ஒரு சமூக-அரசியல்-வரலாற்று முன்னோக்கு) என்ற ஆவணத்தை ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளார்.   

ஐரோப்பாவில் திடீரென ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் காரணமாக, பிரெஞ்சு தலைநகர் பாரிஸில், ஜனவரி 14 ஆம் திகதி, நன்கு அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் சகிதம் நடைபெறவிருந்த இவ் ஆவண வெளியீடு, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இருப்பினும், ஐரோப்பாவிலும் பிரித்தானியாவிலும் சில முக்கிய நபர்களிடம் ஆங்கிலம், தமிழ் பிரதிகளை கையாளிக்கப்பட்டதை தொடார்ந்து, இவ் ஆவண விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

“நீதியை நோக்கி யதார்தங்களும் வெளிப்பாடும்” என்று பெயரிடப்பட்ட இவ் ஆவணம், பல தசாப்தங்களாக கிருபாகரனினால் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் உள்ளடக்கியுள்ளதுடன், இவை உலகில் நன்கு அறியப்பட்ட அச்சு ஊடகங்கள் மற்றும் மின்ஊடகங்களில் வெளியிடப்பட்டவை. 

இவ் ஆவணத்தை கிருபாகரன் தனது பெற்றோர் – இலங்கை கல்வி அமைச்சின், கல்வி இலகாவின் ஓய்வு பெற்ற ஆலோசகர் மறைந்த திரு. ச. விசுவலிங்கம், மறைந்த பத்மாசனி விசுவலிங்கம் ஆகியோருக்கும் – இவ் ஆவணத்தை வெளியிட ஊக்குவித்து உதவிய, தனது மனைவி டியேற்றி மக்கோனாலிற்கும் அர்ப்பணித்துள்ளார். ஆவணத்தின் அட்டை படத்தை, டியேற்றி, இவரது சிந்தனைக்கு ஏற்ற முறையில், ‘கிருபாவும் அவரது பாதுகாவலர்களும்’ என்ற பொருள்பட  வடிவமைத்துள்ளார். 

ஆங்கிலம் மற்றும் தமிழ் பதிப்புகள் இரண்டிலும், ஒரே மாதிரியாக கட்டுரைகளைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. 

ஆவணத்தில் உள்ளடக்கங்கள் (1) ஐ.நா.சபையும் சர்வதேச விவகாரமும் (2) சிறிலங்கா விவகாரங்கள் (3) இந்தியா விவகாரங்கள் (4) வேறு விவகாரங்கள் (5) ஊடகம் (புகழ்ச்சி, விமர்சனம் ஆகிய இரண்டும்) மற்றும் தனது இளம் வயது ஆக்கங்கள் எழுத்துக்கள் உட்பட பழைய புதின பத்திரிகையில்  வெளியான இவரது விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இவ் நூல் வருங்கால சந்ததியினருக்கு தகவல்களை வழங்குவதற்காகவும், இலங்கையில் இனப் பிரச்சனை பற்றி அறிந்தவர்களுக்கு மேலதிக தகவல்களை வழங்குவதற்காகவும், இலங்கையில் இனப்பிரச்சினைக்கு சாத்தியமான வழிகளை தேடும் வகையில், இவ் ஆவணம் உதவக்கூடிய முறையில், வெளியிடப்பட்டுள்ளதாக கிருபாகரன் கூறியுள்ளார். 

திரு கிருபாகரன், ஐரோப்பா, பிரித்தானியா  மற்றும் வேறு நாடுகளில்  உள்ள பல நன்கு அறியப்பட்ட ஊடகம் மற்றும் மனித உரிமைகள் சங்கங்களில் நீண்டகால உறுப்பினர் என்பது குறிப்பிடதக்கது. இவர் 1990 இல் பிரான்சில் நிறுவப்பட்ட தமிழர் மனித உரிமை மையத்தின் – TCHRன் ஸ்தபாக பொதுச் செயலாளர் ஆவார். 

இதன் ஆங்கில நூலிற்கு – பேராசிரியர் நிகால் ஜெயவிக்கிரமா, பேராசிரியர் வே. இலகுபிள்ளை, சந்திமா வித்தானகே ஆகியோர் ஒப்புதல்களை வழங்கியுள்ளனர்.  

பேராசிரியர் நிகால் ஜெயவிக்கிரமா, இலங்கை நீதி அமைச்சின் முன்னாள் நிரந்தரச் செயலாளராகவும், சட்டத்துறை இணைப் பேராசிரியராகவும் கடமையாற்றுவதுடன், ஐ.நா.வின் ஓர் சுதந்திர சட்ட நிபுணராவார். – பேராசிரியர் வே. இளகுப்பிள்ளை, கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்ரும், மலேசியா  பினாங்கு பல்கலைக்கழகம், சாம்பியா பல்கலைக்கழகம் மற்றும் கனடா அணுசக்தி ஆணையத்தின் (ஓய்வு பெற்ற) மூத்த விஞ்ஞானிமாவர் – சந்திமா வித்தானகே நிர்வாக ஆசிரியர், லங்கா நியூஸ் இணையதளம் லண்டன் , கொழும்பு. 

தமிழ் நூலிற்கான ஒப்புதல்களை – ‘வீரகேசரி வார இதழ்’ பிரிவின் முன்னாள் தலைமை ஆசிரியரும், Voice of world media Network தலைமை ஆசிரியரும் இயக்குனருமான, திரு வி தேவராஜ் – மூத்த பத்திரிகையாளரும் ‘தினக்குரல் வார இதழின்’ முன்னாள் ஆசிரியருமான திரு பாரதி ராஜநாயகம் – ஐபிசி செய்தி குழு (ஐபிசி தமிழ் தொலைக்காட்சி, வானொலி, லங்காசிறி, தமிழ்வின்) வழங்கியுள்ளனர்.  

கிருபாகரன் தனது நன்றிகள்,  முன்னுரையில், தனது ஆக்கங்களை வெளியிட்ட அனைத்து ஊடகங்களுக்கும், இந்த ஆவணத்தை வெளியிட பல ஆண்டுகளாக ஊக்குவித்த நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் தனது அன்றாடப் பணிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் சிறப்பு நன்றி கூறப்பட்டுள்ளது. 

இரண்டு மொழிகளிலுமான வெளியீடுகள் – ஐரோப்பா, பிரித்தானியா, கனடா, ஆவுஸ்திரேலியா மற்றும் நாடுகளில் கூடிய விரைவில் விநியோகிக்கப்படுமென கிருபாகரன் கூறியுள்ளார். 

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.