சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது

0
82

பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துங்கொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வரும்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த போராட்டத்தின் போது தர்ஷன ஹந்துங்கொட அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய போராட்டக்காரர்களை ஊக்குவித்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு பல தடவைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போது, ​​அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கிடைத்த நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நாடு திரும்புகையில் நேற்று (05) இரவு அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here