கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு!

0
53

தமிழ்த் தேசிய மே தின நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

மே தின பேரணியை பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொடியசைத்து ஆரம்பித்து வைத்தனர்.

பறை இசையுடன் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமான பேரணி ஆரம்பமாகி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானம் நோக்கி சென்றடைந்தது.

தொடர்ந்து உயிரிழந்த மக்களின் நினைவாக மேடையில் பறை இசைக்கப்பட்டது. பின்னர் மேதின சுடர்களை தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏற்றி வைத்த பின்னர் அஞ்சலி இடம்பெற்றது.

தொடர்ந்து தொழிலாளர் தின நிகழ்வுகளும், உரைகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் சமயத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், எஸ்.சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிவமோகன் மற்றும் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here