டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

இலங்கைக்காக இந்தியா எப்போதும் ஒரு நம்பிக்கையான மற்றும் உண்மையான பங்காளியாகத் திகழும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார். 

இந்தச் சந்திப்பு குறித்து ‘X’ சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜே.வி.பி குழுவினருடன் மிகவும் சுமூகமான மற்றும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கு இந்தச் சந்திப்பு சிறந்த அடித்தளமாக அமைந்ததாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...