இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் : நீதியமைச்சர்!

0
141

அண்மையில் அமுல்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதை அரசாங்கம் அவதானித்துள்ளதுடன், சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இந்தச் சட்டத்தை பிழையானது என அழைப்பது அர்த்தமற்றது என்றும், சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரினார்.

“இந்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. சில குறைபாடுகளை நாங்கள் அவதானித்துள்ளோம். திருத்தங்களைச் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேவையான திருத்தங்களை நீங்கள் முன்மொழியுங்கள். அவற்றை நாங்கள் விவாதிப்போம். அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. பாராளுமன்றத்தில் விவாதித்து தேவையான திருத்தங்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இணையவழி பாதுகாப்புச் சட்டம் பிழையானது என அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதுடன், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை பாராட்டுக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சட்டம் தொடர்பான விவாதங்களுக்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here