ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

0
188

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி வரலாற்று சிறப்பு மிக்க புனித கதிர்காமம் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் நேற்றும் (07), இன்றும் (08) திகதிகளில் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிறப்பு பூஜை வழிபாடுகள் மஹாசென் தேவாலயத்தில் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து அஷ்டபலபோதியா வில் சமய அனுஷ்டானங்கள் நடந்தன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புனித அரச மரத்திற்கு அட்டபிரிகரை வழங்கினார். மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து தூபிக்கான சிறப்பு வஸ்திர (கப்ருக்க) பூஜை இடம்பெற்றன.

தொடர்ந்து முழு இரவு பிரித் பிரசங்கம் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்கு பிரிகர மற்றும் காலை நேர தானம் வழங்கி வைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here