ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகருடன் சஜித் பிரேமதாஸ முக்கிய சந்திப்பு

0
55

அமெரிக்காவின் முன்னாள் செனட் சபை உறுப்பினர் பொப் கெரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அவர் ஜனாதிபதி ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகராகவும் பணிபுரிந்தவராவார். இரு நாடுகளையும் பாதிக்கும் பல பொதுவான பிரச்சினைகள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம் பெற்றதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது எடுத்துரைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவின் பிரகாரம் செயல்படுத்தப்படும் “மூச்சு” மற்றும் “பிரபஞ்சம்” திட்டங்கள் குறித்து பொப் கெரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்ததோடு, தொடர்புடைய நலன்புரித் திட்டங்களில் அமெரிக்க பரோபகாரர்களின் ஆதரவின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here